×
 

விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் விசில் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார்.

த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் நடத்தி வருகிறார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் விஜய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது தமிழக அரசியலில் உற்று நோக்க கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

வேட்பாளர்களை விஜய் நேர்காணல் செய்வார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இன்னும் அதற்கான பணிகள் நடக்காமல் இருந்து வருகிறது. வேட்பு மனுக்கள் கொடுப்பதற்கு அவகாசமும் வழங்கப்பட்டது. யார் வேட்பாளர் என்று தெரியாத நிலையில் விசில் சின்னத்திற்கு மட்டும் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி..!

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளார். வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விசில் சீனத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பாளர் பெயர் இன்றி விசில் சின்னத்துடன் துண்டு பிரசுரத்தை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் வெறும் விசு சின்னத்துடன் வாக்கு சேகரிப்பு செய்து வருகிறார். தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு விஜய் படத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share