×
 

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.. வாழ்த்து தெரிவித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பைச் சட்டமன்றத் தேர்தல் களத்திற்குத் தயார் செய்யும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட கழக அமைப்பில், தற்போது நிர்வாக வசதிக்காகப் புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு, 8 முக்கிய மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தனது கழகப் பணிகளைச் செம்மைப்படுத்தச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டங்களைப் பிரித்துள்ளது. அந்த வகையில், அரியலூர், ராணிப்பேட்டை (கிழக்கு & மேற்கு), ராமநாதபுரம் (கிழக்கு & மேற்கு), ஈரோடு (கிழக்கு, மாநகர் & மேற்கு), கடலூர் (கிழக்கு, தெற்கு, மேற்கு & வடக்கு), கரூர் (கிழக்கு & மேற்கு), கள்ளக்குறிச்சி (கிழக்கு & மேற்கு), கன்னியாகுமரி (கிழக்கு, மத்திய & மேற்கு), காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி (கிழக்கு, மத்திய & மேற்கு), கோவை (தெற்கு, புறநகர் கிழக்கு, புறநகர் வடக்கு & மாநகர்), மற்றும் சிவகங்கை (கிழக்கு & தெற்கு) ஆகிய மாவட்டங்களுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வப் பட்டியலைத் தலைவர் விஜய் வெளியிட்டு, புதிய நிர்வாகிகளுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள் மூலம், தேர்தல் களத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தவெக-வின் செயல்பாடுகளை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். "புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவிகளுக்காகப் பல்வேறு இடங்களில் போட்டிகள் நிலவி வந்த சூழலில், தகுதியானவர்களைத் தேர்வு செய்து விஜய் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ல் கோட்டையைப் பிடிக்கத் தயாராகும் தவெக-வின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ தமிழக அரசியலில் ஒரு திருப்பமாகக் கருதப்படுகிறது.
 

இதையும் படிங்க: #BREAKING: தூத்துக்குடி தவெக-வில் திருப்பம்! பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் போராட்டம்; சாமுவேல் ராஜை நியமித்த விஜய்!

இதையும் படிங்க: "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் ஏன்?" - நடிகை கஸ்தூரி காரசாரமான கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share