வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

2026இல் திமுகவுக்கு மிகப் பெரிய தோல்வி காத்திருக்கிறது.. எல். முருகன் தாறுமாறு கணிப்பு.!!

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று  மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்துகிறது. நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது நாமக்கல்லைச் சேர்ந்தவர்தான் திமுகவின் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
அப்போது திமுகவில் பலர்ய்ம் அதிகாரம் மிக்க மத்திய அமைச்சராக இருந்தனர். அப்போது ஏன் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை?

வரும்  2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். அந்த தேர்தலில் திமுக காணாமல் போகும். அதிமுக – பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி ஆகும். சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை தமிழக முதல்வர் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னாள் முதலவர் மு. கருணாநிதி உட்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனர்,” என்று எல். முருகன் கூறினார்.

இதையும் படிங்க: “வஞ்சக பாஜக- துரோக அதிமுக” – கையில் துண்டு பிரசுரத்துடன் வீடு, வீடாக படையெடுக்கும் திமுக!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी