×
 

மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  பின்னர், அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது காங்கியனூர் கிராமம். இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர்    அன்பரசி. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மணிவண்ணன் (62)  நான்கு வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியராக உள்ள வெங்கடேசன் (46) என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கியதாகவும், அந்தக் கடன், அசலும் வட்டியும் சேர்த்து   ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ஆசிரியர் வெங்கடேசன் மணிவண்ணனிடம் கேட்டு துன்புறுத்தியதாகவும், பணம் தரவில்லை என்றால் மருந்து குடித்து செத்துப்போ என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி இரவு விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துவிட்ட மணிவண்ணனை ஊராட்சி மன்ற தலைவியான அன்பரசி மற்றும் அவரது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  பின்னர், அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இன்று காலை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில்  மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மணிவண்ணனின் மைதுணர் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

வட்டிக் கொடுமையால் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share