×
 

தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

தமிழ்நாடு அரசு புதிதாக பதவி ஏற்றதற்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், துறை செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில முக்கிய மாவட்டங்களுடைய அதாவது சென்னையை தவிர்த்து இரண்டாம் கட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களுடைய மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 

அந்த அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிருலோஷ் குமார், ஐஏஎஸ,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளராகப் பணிமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த சரண்யா அரி, ஐஏஎஸ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகப் பணிமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த மிருணாளினி ஐஏஎஸ், அரியலூர் மாவட்ட ஆட்சியராகப் பணிமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி, தற்போது பணியிட ஒதுக்கீட்டிற்காகக் காத்திருக்கும்  எஸ். மாலதி ஹெலன், ஐஏஎஸ், அவர்களுக்குப் பதிலாக, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

கோவை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த எம்.சிவகுரு பிரபாகரன், ஐஏஎஸ், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணிமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த எஸ்.கவிதா, ஐஏஎஸ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பணிமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share