×
 

7 மணி வரைக்கும்தான் டைம்! அப்புறம் கேரளா கிளம்பிருவேன்! கறார் காட்டும் கவர்னர் அர்லேகர்!

தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழக அரசியல் களம் இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. த.வெ.க.,வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு தனது முடிவை அறிவிக்கப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) தெரிவித்துள்ளது. அறிவிப்புக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவுகிறது.

காலை முழுவதும் தன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய த.வெ.க., தலைவர் விஜய், தற்போது நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார். இந்நிலையில், வி.சி.க., தனது ஆதரவுக் கடிதத்தை த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஏற்கெனவே கொடுத்துவிட்டதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது த.வெ.க., வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பு கவர்னராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளா புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் ஆட்சி அமைப்பு தொடர்பான இறுதி முடிவுகளுக்கு முன் நடைபெறுவதால் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க., ஆட்சி அமைக்கும் முயற்சியில் கூட்டணி ஆதரவு இன்னும் உறுதியாகாத நிலையில், வி.சி.க.,வின் இன்றைய அறிவிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்தால், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் தொண்டர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை 4 மணிக்காக காத்திருக்கும் நிலை நிலவுகிறது. வி.சி.க., ஆதரவு அளித்தால் அது த.வெ.க.,வுக்கு பெரும் ஊக்கமாக அமையும். மறுபுறம், ஆதரவு மறுக்கப்பட்டால் அரசியல் சூழல் மேலும் சிக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னர் பயணம், விஜயின் நடவடிக்கைகள், வி.சி.க., அறிவிப்பு என இன்று தமிழக அரசியல் மிக முக்கியமான திருப்புமுனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாலை 4 மணிக்குப் பிறகு தமிழகத்தின் அடுத்த அரசியல் அத்தியாயம் தொடங்கும் என அனைத்துத் தரப்பினரும் உற்று நோக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share