×
 

விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடியில் சைக்கிள் ஓட்டிய அதே பாணியில் இம்முறையும் அவர் சைக்கிள் ஓட்டி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு முன்பு, தொண்டர்கள் மத்தியில் விசில் ஊதியபடி சைக்கிள் ஓட்டினார். ரசிகர்களும் தொண்டர்களும் விஜய்க்கு பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சைக்கிள் ஓட்டும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு முன்பு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற பிரசாரத்தின்போது சிக்கல் ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவர் சிலை அருகே காலை 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருந்தார். 37 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

விஜய் கல்லூரிச் சாலையில் சிறிது தூரம் தொண்டர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டினார். பின்னர் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே வந்தபோது நேரம் 2.30 மணியைத் தாண்டியிருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் ஆனதால், விஜய் பேசாமல் சைக்கிள் ஓட்டியபடி கையசைத்து சென்றுவிட்டார். இதனால் த.வெ.க. தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

எஸ்.எஸ்.கோட்டை, திருப்பத்தூர், தம்பிபட்டி, பிள்ளையார்பட்டி, பாதரக்குடி, காரைக்குடி புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், பிரசார நேர வரம்பு காரணமாக பேச முடியாமல் போனது தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரியில் இன்று சைக்கிள் ஓட்டிய விஜய், தொண்டர்களுடன் நெருங்கிப் பழகும் வகையில் பிரசாரம் செய்தார். தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், விஜய்யின் இந்த சைக்கிள் பிரசாரம் த.வெ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share