வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மீண்டெழுந்த தவெக… கூடியது பொதுக்குழு கூட்டம்… புதுதெம்பில் விஜய் பங்கேற்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 

இதையும் படிங்க: மொத்த பவரையும் கையில் எடுக்கும் விஜய்… தவெக பொதுக்குழுவில் நிறைவேறப் போகும் ஸ்பெஷல் தீர்மானம்…!

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. 40 நாட்களுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் கோரச்சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் இது. தேர்தல் பணிகள், அடுத்த கட்ட நடவடிக்கை, 2026 தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கொள்கை தலைவர்களின் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: பிள்ளையாரப்பா எந்த வம்பு தும்பும் வர கூடாதுயா! தேங்காய் உடைத்து வழிபட்ட புஸ்ஸி ஆனந்த்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी