×
 

ஜனநாயகன் தள்ளிப்போனாலும் விஜய்க்கு சாதகம்தான்!! 2 நல்லது இருக்கு!! தவெகவினர் சீக்ரெட் ப்ளான்! ரசிகர்கள் ஹாப்பி!

ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு தற்போது தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. 

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் விஜயின் அரசியல் நுழைவுக்கு முன்னர் அவரது கடைசி படமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அக்டோபர் 2025 இல் வெளியீடு என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 9, 2026 என மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்., + இடதுசாரிகள்!! கூட்டணி பேரத்துக்கு அச்சாரமா? கடுப்பில் திமுக!

தணிக்கை வாரியம் டிசம்பர் 19 ஆம் தேதி சில காட்சிகளை நீக்க பரிந்துரைத்தது. படக்குழு அவற்றைச் செய்து டிசம்பர் 24 ஆம் தேதி மீண்டும் சமர்ப்பித்தது. டிசம்பர் 29 ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் ஜனவரி 5 ஆம் தேதி திடீரென படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது தணிக்கை வாரியம். இதற்கு சில புகார்கள் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்தத் தாமதம் விஜய்க்கும் தவெகவுக்கும் அரசியல் ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் கருதுகின்றனர். முதலாவதாக, இந்தத் தாமதத்தை திமுக அரசு திட்டமிட்டு செய்தது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பொங்கல் ரேஸில் விஜயின் படத்துடன் போட்டியிடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ஜனநாயகன் தாமதமானால் பராசக்திக்கு முழு லாபம் என்று ரசிகர்கள் கோபப்படுகின்றனர். இதனால் திமுகவுக்கு எதிரான கோபம் அதிகரித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு வாக்குகள் உறுதியாகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இரண்டாவதாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை வாரியம் சான்றிதழ் மறுப்பதால், தவெக பாஜகவின் 'பி-டீம்' என்ற திமுகவின் குற்றச்சாட்டு பொய்யாகும் என்று தவெகவினர் வாதிடுகின்றனர்.

"பாஜகவுடன் தொடர்பு இருந்தால் இப்படி தாமதம் ஏற்படுமா? நேரடியாக பேசி சர்டிபிகேட் வாங்கியிருக்கலாமே!" என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். இது தவெகவின் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்று கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.

மேலும், படம் தாமதமானாலும் போட்டியைத் தவிர்த்து, பின்னர் வெளியானால் பெரும் வசூலை ஈட்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே முன்பதிவில் பல கோடிகள் வசூலித்த இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சர்ச்சை தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் இதை தங்கள் கட்சிக்கு சாதகமாகப் பார்க்க, தவெக நிர்வாகிகள் "எப்படிப் பார்த்தாலும் வெற்றி நமதே!" என்று உற்சாகமாக உள்ளனர்.

இதையும் படிங்க: ஜனநாயகன் விஜய்க்கு கை கொடுக்கும் காங்.,! வரிசை கட்டும் தலைவர்கள்! திமுகவுக்கு எதிராக ப்ளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share