பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட நான்கு பேர் பலி; கவலைக்கிடமாக 12 வயது சிறுவன் கோவை மருத்துவமனையில் அனுமதி
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த தனபால் (37),அவரது மனைவி மேனகா (35),மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஜித் (12), உறவினர் சினேகா (23) ஆகிய ஐந்து பேர் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.பொள்ளாச்சி அடுத்த பல்லடம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி தனபால் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதியது .
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தனபால், அவர் மனைவி மேனகா, உறவினர் சினேகா, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்17 வயதான சிறுமி கனிஷ்கா,12 வயது சிறுவன் சுர்ஜித் ஆகியோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் இதில் கனிஷ்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!
சிறுவன் சுர்ஜித்துக்கு முதல் உதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஓட்டுநர் சரவணன் (39), கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
இதையும் படிங்க: தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!