திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனி சாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின், விசித்திரமான அறிவிப்பை, வெளியிட்டுள்ளார், ஏற்கனவே குடும்பதலைவிகள், உரிமைத்தொகை பெற்று வந்துள்ளவர்களுக்கு 3 மாதத்திற்கு முன் பணமாக 3000 ஆயிரம் ரூபாய் எனவும், கோடை கால தொகுப்பு என 2000 வழங்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் காரணங்களையும், தெரிவித்துள்ளார். எங்களையும் மத்திய அரசையும் குறிப்பிட்டு சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்பது வடிக்கட்டிய பொய்.
2024 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் போது உரிமைத்தொகை வழங்கப்பட்டது, தேர்தல் தோல்வி பயமாக , தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், வாக்குகளை பெறுவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மக்களிடையே, செல்வக்கை இழந்துள்ளது திமுக, 2022, 2023, 2024, 2025,கோடை காலம் வந்துள்ளது, 2026 கோடை காலம் மட்டும் எப்படி கண் தெரிகிறது, குடும்பத்தலைவி கஷ்டத்தை பார்க்க வில்லை, தேர்தலில் அஞ்சியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் திமுக ஆட்சி ஏற்றவுடன் மாதந்தோறும் 1000 என அறிவித்தார், 27 மாதம் வழங்கப்படவில்லை, இதனை எதிர்கட்சியில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம், ஆட்சி ஏற்றவுடன், 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை நம்பி குடும்பதலைவிகள் வாக்களித்தார்கள், 27 மாதம் தொடர்ந்து வலியுறுத்தினோம், 28 ஆம் மாதத்தில் தான் திமுக உரிமைத்தொகை அளித்துள்ளது, 27 மாதம் பாதிக்கப்படவில்லையா குடும்ப தலைவிகள் திட்டமிட்டு, தேர்தலை வைத்து குடும்பதலைவிகள் வாக்குபெறுவதற்காக இந்த அறிவிப்பு, பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் ஸ்டாலின்.
இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!
லேப்டாப் விஞ்ஞான கல்வி கிடைக்க அம்மா அளித்த திட்டம், இந்த திட்டத்தை முடக்கி, தோல்வி பயத்தில் இளைஞர்கள் வாக்கு தேவை கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். 2025 ஆம் ஆண்டு லேப்டாப் அளித்திருக்க வேண்டும். பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு கொடுக்குகிறார்கள்.
அமித்ஷா தமிழகத்திற்கு வருவது அவரது கட்சி நிகழ்ச்சிக்கு, வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்போம் என தெரிவித்தார். இன்னும் எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது..
திமுகவிற்கு போய் அதிமுகவிற்கு வந்தவர், முன்னாள் அமைச்சர் நீலோபர் கபீல், அவர் குறித்து எந்த பதிலும் அளிக்க விரும்பவில்லை, இந்த ஆட்சியில், கனிம வளக்கொள்ளையில் ஈடுப்பட்டுவர்களுக்கு, அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும்,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது என சேலத்தில் விஜய் பேசிய கேள்விக்கு, விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை, எந்த ஆட்சி அமைக்கப்படும் என மக்களுக்கு தெரியும், விஜயிற்கு என்ன தெரியும், உங்களுக்கு தெரியும் பிரச்சனை நடந்து 72 மணி நேரத்திற்கு பிறகு வரவில்லை. கடமையை செய்யவில்லை, 15 நாள் அலுவலகத்தை மூடியவர் விஜய். அவர் பிரச்சனையை சந்திக்க வேண்டும் என பேசினார்.
நாடாளுமன்ற விவகாரம் முழுமையாக தெரியாது, அப்படிப்பட்ட சம்பவம் தவறு, பிரதமரை முடுக்குவது தவறு, ஊடகத்தையும், பத்திரிகையிலும் சர்வாதிகாரி போல் செயல்படுகின்றனர். இதனால் அதிமுக விமர்சனம் பற்றி கவலைப்படுவதில்லை என பேசினார்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!