புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் தேடி நடைபயணத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது.
அப்போது மக்களிடையே உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த 20 ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் மக்களுக்காக பல்வேறு பிரச்சனை குறித்து குரல் எழுப்பி வந்தார். தேமுதிக கட்சியே மக்களுக்காக ஆரம்பித்த கட்சி ஒரு தடவை தன்னை முதலமைச்சர் ஆக்கினால் வாக்காளர்களை தங்க தட்டில் வைத்து பாதுகாப்பேன் என தெரிவித்தார். ஆனால் மக்கள் 500 ரூபாய், பிரியாணி, குவாட்டர் போன்றவற்றிற்காக வாக்குகளை விற்று விட்டார்கள்.
நீங்கள் வாங்கும் பணம் ஐந்து வருடங்களுக்கு போதுமானதாக இருக்குமா?, இது போன்று வாக்குகளை விற்பதால் நல்ல ஒரு அரசியல் கட்சியை இழந்து விடுகின்றோம். தற்பொழுது இங்கே அமைச்சராக இருப்பவர் மணல் கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அறந்தாங்கி பகுதியில் கல்லூரி கட்ட முடியாதவர் சென்னையில் கல்லூரிகள் கட்டி வைத்துள்ளார் அரசாங்க பணத்தில் கல்லூரிகள் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தால் அதை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. மக்கள் உரிமை மீட்பு 2.0 - லோகோவை வெளியிட்ட தேமுதிக..!!
50 கல்லூரியில் கூட அவர்கள் கட்டலாம் அறந்தாங்கி பகுதிக்கு புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும், கட்டுமாவடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை பிரச்சாரத்தில் சுட்டிக் காட்டினார். மேலும் ரத யாத்திரையில் நடை பயணத்தில் வந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் மாலை வணித்தும் பூக்களித்துவியின் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். பிரச்சாரத்திற்கு முன்னதாக சாலையில் நடந்து வந்த பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு கையசைத்தவாறு நடந்து வந்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி குறித்து நான் அப்படி பேசல! விளக்கம் கொடுத்த பிரேமலதா... விமர்சிக்கும் இணையவாசிகள்