தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை பல ஆண்டுகளாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் போட்டித் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆகியவற்றின் மூலம் நியமனங்கள் நடைபெறுகின்றன. இந்தச் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்கள் பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்துள்ளன.
சிலர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது ஒரு கசப்பான உண்மை.இந்தப் பிரச்சினையின் வேர்கள் 2012-2013 காலகட்டத்திற்கு செல்கின்றன. அப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி நியமனங்கள் நடைபெற்றன. TET தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி பெற வேண்டும் என்பது புதிய விதி.
ஆனால் 13 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, 2025-2026 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள் எடுத்து வருகிறது. முதுகலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆசிரியர் கையை போலீசார் உடைத்த புகார்... கடும் அதிருப்தி... சக ஆசிரியர்கள் தர்ணா...!
இதற்கிடையில் ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நான்கு முறை தகுதித் தேர்வு, ஒரு முறை நியமனத் தேர்வு எழுதி 13 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக காத்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். சென்னை எழும்பூரில் ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் கைகளில் தட்டுகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில் பணிக்காக காத்திருப்போர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எங்களுக்கு என்ன புத்தாண்டு? ஓயமாட்டோம்... 8வது நாளாக போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்...!