தமிழ்நாடு ›

#RAIN ALERT: பாம்பன், தூத்துக்குடியில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெயர் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்…எச்சரிக்கும் வானிலை மையம்!

இதனிடையே மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் சில சமயங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பயமுறுத்தும் பேய் மழை..! 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी