சட்டசபையில் இருந்து உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலுக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இந்திய அரசியலமைப்பை மதிக்காமல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய கீதம் ஆரம்பத்திலேயே ஒலிக்கப் படவில்லை என சொல்லி வெளி நடப்பு செய்து சட்டசபையின் மாண்பை மரபுகளை குலைத்திருக்கிறார் என்று கூறினார்.
இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான ஆளுநரின் செயலை நான் வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசு நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவது தான் தொன்று தொட்டு வரும் வழக்கம். இதை மாற்ற நினைப்பதே தமிழக மக்களின் அரசின் உணர்வுகளை புண்படுத்துவதோடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

ஆளுநரின் உரை என்பது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது என தெரிவித்து ராஜேஷ்குமார் தமிழக அரசின் சிறப்பான மகத்தான திட்டங்கள் என்ன என்பது மக்களை சென்றடைய கூடாது என்பதற்காகவே அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து வெளிநடப்பு செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "GET OUT RAVI"..! சட்டசபையை புறக்கணித்த ஆளுநர்..! எதற்கு இந்த பதவி? வலுக்கும் எதிர்ப்பு..!
தமிழக அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்வது கண்டிக்கதக்கது என்று காட்டமாக கூறியுள்ள அவர், ஆளுநர் பதவி என்பது அரசியல் கட்சி பதவி அல்ல அது அரசியலமைப்பை காக்கும் கடமை சார்ந்தது என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று கூறினார். தொடர்ச்சியாக ஆளுநர் தமிழக அரசிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரானால் அவரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்து உள்ளார்.
இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!