வரும் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் தொண்டர்கள், பொது மக்களை சந்திக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். தன்னை சந்திக்க வருபவர்கள் அரசியல் பேச வேண்டாம் என அன்புக்கட்டளை.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளை முன்னிட்டு மருத்துவர் அன்புமணி குடும்பத்துடன் சென்று மருத்துவர் ராமதாசை சந்தித்தார்.
அப்போது இருவரும் கண்ணீர் விட்டு அழுத நிலையில் இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி மருத்துவர் ராமதாசின் 88-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் குடும்பத்தில் மீண்டும் புயல்! அன்புமணிக்கு எதிராக புதிய அமைப்புடன் களமிறங்கும் ஸ்ரீகாந்தி?!
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்று நிலையில் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் வருகின்ற ஒன்றாம்(01-09-26) தேதி முதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை மருத்துவர் ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.
காலை பத்து மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலும் மருத்துவர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார். தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் அரசியல் பேச வேண்டாம் என்றும் குறிப்பாக பாமக குறித்த அரசியல் பேச வேண்டாம் என மருத்துவர் ராமதாஸ் அன்பு கட்டளை இட்டு உள்ளார்.
இதையும் படிங்க: காவிரி பிரச்சனை... சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு..! விஜய் அரசை பாராட்டிய அன்புமணி..!!