தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் தங்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். தங்கள் கட்சி மட்டுமில்லாத தங்கள் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் தங்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். தங்கள் கட்சி மட்டுமில்லாத தங்கள் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஏப்ரல் 12 அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் இரா. அருளை ஆதரித்து அவர் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், துரோகிகள் துரோகம் செய்தாலும் அது வெற்றி பெறாது என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். பிரசாரத்தை முடித்துவிட்டு மேடையிலிருந்து இறங்க முயன்றபோது, 86 வயதான அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

அப்போது அங்கிருந்த பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமதாஸ் மயங்கியதற்கான காரணம் சர்க்கரை அளவு குறைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இருப்பினும், முழுமையான சிகிச்சைக்காக அவரை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாகவும் அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். ராமதாஸ் விரைவில் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார்களா..? அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கணும்..! அண்ணாமலை காட்டம்..!