அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு நடத்த அனுமதி தரப்படாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு அரசு முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், உரிய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து தான் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல், , மாநகராட்சி, தீயணைப்பு, மருத்துவத்துறையை உள்ளடக்கியவரை ஆலோசித்து விதிகளை வகுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பத்து நாட்களில் விதிகளை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனிடையே, பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு நோ பர்மிஷன்..!! போலீஸ் அதிரடி..!!
அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ஆம் தேதிக்குள் அரசு இதழில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசளித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்க செய்யலாம் என்றும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING மக்கள் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!