திருமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து - 25 பள்ளி மாணவ மாணவியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில், குதிரைசாரிகுளம் என்ற இடத்தின் அருகே , திருமங்கலத்தில் உள்ள பி கே எம் கல்விக் குழும ஆரம்பப்பள்ளி பேருந்து, 25 பள்ளி மாணவ, மாணவிகளுடன் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தில் உள்ள டீசல் டேங்க் பகுதியில் இருந்து திடீர் புகை ஏற்பட்டு, தீப்பிளம்பு வந்தது .
அதனைஅறிந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன், திடீரென வண்டியை நிறுத்தி 25 பள்ளி மாணவ, மாணவியர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டு தொலைவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து திடீரென தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கின. இதனால் நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன .
இதையும் படிங்க: உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!
இதனை தொடர்ந்து திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 15 நிமிடமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 25 மாணவ, மாணவியர்களை மாற்று பேருந்தை வழைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். இந்த திடீர் தீ விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் லவ் ஜிகாத்! சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம்! அரங்கேறிய கொடூரம்..