சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில்+2 படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி பள்ளி வாசலில் அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, காரில் வந்த ஆறு பேர் 17 வயது மாணவியை தூக்கிச் சென்றதாக கூறப்பட்டது.
மானாமதுரையில் இருந்து அந்த பெண்ணை காரில் கடத்தி வந்த கும்பல் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வரும் பொழுது அவர்களோடு சண்டையிட்டு காரில் இருந்து தப்பித்து குதித்து தப்பியதாகவும், காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
பள்ளி மாணவியை சிலர் காரில் கடந்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது அது உண்மையா? என்பது குறித்து சிவகங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத 6 நபர்கள் ஒரு காரில் சிறுமியை கடத்தியதாகவும், அந்த சிறுமி சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு அருகே வரும்போது காரிலிருந்து குதித்து தப்பித்ததாகவும்,காயம் அடைந்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி
இது தொடர்பாக சிவகங்கை DSP தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி ஆய்வு உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்தியதில் மேற்கண்டவாறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தெரிய வருகிறது. மேற்படி சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, எந்தவிதமான கடத்தல் அல்லது தாக்குதல் நிகழவில்லை என உறுதி செய்யப்பட்டது.
காவல் துறையினரின் விளக்கத்தை பெறாமல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்தியானது உண்மைக்கு மாறானது என மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: தெருநாய்களை பிடிக்க 8 வாரம் தான் டைம்.. அதிரடி ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்..!!