வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை… திமுகவை கண்டித்த சீமான்..!

உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள் மீது அடக்கு முறையை ஏவும் போக்கை திமுக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது என்றார்.

தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் சீமான் கூறியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது என்று தெரிவித்தார்.

தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனசாட்சி இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மை என்று தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அவ்ளோ அலட்சியம்…! திமுகவுக்கு ELECTION-ல இருக்கு.. குரூப் 2 விவகாரத்தால் சீமான் ஆவேசம்..!

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும். தேர்ச்சி மதிப்பெண்களாக 40% மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்., பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை பட்டியலுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: சீமானுக்கு கலப்பை விவசாயி… அத்வாலேவுக்கு கரும்பு விவசாயி… சின்னம் ஒதுக்கீட்டில் சர்ப்ரைஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी