இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் மீனவச்சொந்தங்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் 9 தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழ்நாட்டு மீனவர்களில் 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் கடந்த 3 ஆம் தேதி விடுவித்த நிலையில், படகை இயக்கிய 3 மீனவர்களுக்கு மட்டும் 6 மாத கடுங்காவல் தண்டனையும், 11.60 இலட்சம் தண்டமும் விதித்ததோடு, தண்டத்தை செலுத்த தவறும்நிலையில் மேலும் 3 மாதகாலம் கூடுதல் சிறைதண்டனையும் விதித்த கொடுமையும் அரங்கேறியது என்றார்.

ஆனால், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட 9 மீனவச்சொந்தங்களையும் இதுவரை தாயகம் திரும்ப அனுமதிக்காமல் இனவெறி இலங்கை அரசு மிரிஹானா தடுப்பு முகாமில் அடைத்துவைத்து பெருங்கொடுமை புரிந்துவருகிறது என்றும் இதனால் சிறைபட்டுள்ள மீனவச்சொந்தங்களின் உறவினர்கள் பெரும் கவலையும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!
சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்களின் குடும்பத்தினர் ஏழ்மைநிலை காரணமாக தண்டத்தொகை செலுத்த வழியின்றியும் தவித்து வருவதாகவும் கூறினார். இலங்கை அரசின் தடுப்பு முகாமில் வதைபட விடுவது பேரவலம் என்றும் இது தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மேலும் மேலும் துன்புறுத்தும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயல் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!