வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சீமான் கோபமடைந்தார்.
இதையும் படிங்க: ”என் தம்பி விஜய் அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டாரு”... தவெக தலைவரை பொசுக்கென அசிங்கப்படுத்திய சீமான்...!
புதுச்சேரியில் செய்தியாளர்களுடன் நாதக தலைவர் சீமான் ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தார். எஸ்ஐஆர் குறித்த கேள்வியால் ஆத்திரமடைந்து சீமான் வரம்பு மீறி பேசினார். இருக்கையில் அமர்ந்து சீமான் ஆவேசமாக பேசினார்.
SIR - ஐ ஏன் எதிர்க்கிறேன் என்று கூறுகிறாய் என்று கேட்டு ஒருமையில் பேசினார். செய்தியாளருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறி பேசியுள்ளார். போடா… ஆளும்… மை*** இன்று மரபு மீறி பேசியுள்ளார் சீமான்… இதனால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான் தலையில் இறங்கியது இடி... நள்ளிரவில் போலீஸ் நடத்திய அதிரடி...!