இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக 2025 ஆம் ஆண்டு துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் (சி.பி. ராதாகிருஷ்ணன்) கூட்டணியின் ஆதரவுடன் தெளிவான வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் உடல்நலக் காரணங்களால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்றது. இது இந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஏனெனில் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் துணை குடியரசுத் தலைவராக உருவெடுக்கவுள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
இவர் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல் தலைவராக அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ்-ன் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்து, பிஜேபி-யின் தமிழ்நாட்டுப் பிரிவில் முக்கியப் பங்காற்றியவர். துணை குடியரசு தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்து செய்திகள் உலகத் தலைவர்களில் முதன்மையானவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டிருந்தது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியது.

இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழிபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வுபெற்று உள்ள இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதபடும் திருநாள் என்று கூறியிருந்தார். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பஞ்சாப்.. ரூ.1,600 கோடி நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!!
நேற்றைய தினம் டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையன் அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக தெரிவித்திருந்தார். சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பிரதமர் மோடியை புகழ்ந்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிவாரண நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு..!