கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் மனம் திறந்து பேசினார். அதிமுக மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் என்றும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்., அப்போதுதான் தமிழகத்தில் நல்லாட்சி மலரும் என்று தெரிவித்தார். பத்து நாட்களுக்குள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். தலைமைக்கு கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி சீரோடும் சிறப்போடும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மாற்றான் தோட்டத்து மல்லிக்கும் மனம் உண்டு என்றும் மறப்போம் மன்னிப்போம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புவதாக கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பாவம்! தன்னோட நல்லத மட்டுமே இபிஎஸ் பாக்குறாரு… ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அதிமுகவை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா என்றும் தான், மனம் திறந்து பேசியபோது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் தங்களது முழு ஆதரவை தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்துக்களை சொன்னதாகவும், புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 2026 இல் அதிமுகவின் நல்லாட்சி மலர அனைவரும் இணைவது முக்கியம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசையா? செங்கோட்டையன் பரபரப்பு பிரஸ்மீட்..!