சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வேகமாகப் பரவுது. “நாளை உலகம் 6 நிமிடம் இருளில் மூழ்கப் போகுது! இது 100 வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் அரிய சூரிய கிரகணம்!”னு பயமுறுத்துற மாதிரி பதிவுகள் தெறிக்குது. ஆனா, இதை நாசா முற்றிலுமாக மறுத்துடுச்சு. “அப்படி எதுவும் இல்லை, மக்கள் பயப்பட வேண்டாம்,”னு நாசா விஞ்ஞானிகள் தெளிவா சொல்லியிருக்காங்க.
2025-ல அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ம் தேதி வருது, ஆனா அது ரொம்ப சின்ன கிரகணம் தான். இது உலகத்தை முழு இருளில் ஆழ்த்தாது, மாலை நேர வெளிச்சம் மாதிரி மங்கலான ஒளியோட இருக்கும்னு நாசா அப்டேட் கொடுத்திருக்கு.சூரிய கிரகணம்னா என்னனு பார்த்தா, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வந்து, சூரிய ஒளியை மறைக்கும்போது நடக்குற நிகழ்வு. இதனால சில நிமிஷங்கள் பூமியில் ஒளி விழாது. ஆனா, இப்போ சமூக வலைதளங்களில் பரவுற மாதிரி, “6 நிமிடம் முழு இருட்டு”னு எதுவும் இல்லை.
செப்டம்பர் 21-ல் வர்ற கிரகணம் சின்னதா, பெரிய பாதிப்பு இல்லாம இருக்கும். உண்மையிலேயே இந்த நூற்றாண்டுல மிக நீண்ட சூரிய கிரகணம் வரப்போகுது, ஆனா அது 2025-ல இல்லை. அது ஆகஸ்ட் 2, 2027-ல தான் நடக்கும். அந்த கிரகணம் 6 நிமிடம் 22 செகண்ட் வரை நீடிக்கும். 1991-க்கு அப்புறம் இவ்வளவு நீளமான கிரகணம் இதுவரைக்கும் வரலை.
இதையும் படிங்க: நிசார் சேட்டிலைட்; இஸ்ரோவுக்கு பார்லிமென்டில் பாராட்டு! லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் பெருமிதம்..!

2027-ல் வர்ற இந்த கிரகணம் ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய 11 நாடுகளில் தான் பெரிய அளவில் தெரியும். ஆனாலும், இதுவும் முழு இருளை ஏற்படுத்தாது. மாலை நேரம் மாதிரி ஒரு மங்கலான வெளிச்சம் இருக்கும். மற்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்கவே முடியாது. “எல்லாம் இருட்டாகிடும், உலகம் முடிஞ்சிடும்”னு சமூக வலைதளங்களில் பரவுற பதிவுகள் வெறும் வதந்தி தான். நாசா இதை உறுதி செய்து, “மக்கள் பயப்பட வேண்டாம், இது சாதாரண இயற்கை நிகழ்வு தான்,”னு சொல்லியிருக்கு.
இந்த வதந்திகளால மக்கள் குழப்பமடையுறதை தவிர்க்க, நாசா தெளிவான விளக்கம் கொடுத்திருக்கு. “சூரிய கிரகணம் ஒரு அறிவியல் நிகழ்வு, இதுல பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை. சரியான தகவல்களை மட்டும் பரப்புங்க,”னு விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டிருக்காங்க. சமூக வலைதளங்களில் வர்ற பதிவுகளை எல்லாம் நம்பாம, நாசா மாதிரியான நம்பகமான ஆதாரங்களை பார்த்து உண்மையை தெரிஞ்சுக்கணும். 2027-ல் வர்ற கிரகணத்தை பார்க்க ஆவலா இருக்குறவங்க, மேல சொன்ன நாடுகளுக்கு பயணம் போகலாம். ஆனா, அதுவரை இந்த வதந்திகளை நம்பி பயப்படாம, அமைதியா இருப்போம்!
இதையும் படிங்க: Today’s the day! பெருமையுடன் அறிவித்தது இஸ்ரோ!! இன்று விண்ணில் பாய்கிறது நிஷார்!!