வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம்

பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிவிட்டதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் தனது காவல்படை மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் கேய்பர் ஷெகன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலின் வான் படை தளபதியின் இருப்பிடமும் இதே தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகவும் IRGC அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்கனவே உச்சக்கட்டத்தில் உள்ள போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்தன. ஈரான் இதை உறுதிப்படுத்திய பின்னர், பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பல இலக்குகளை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள ஒரு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இது வெறும் பதற்றம் அல்ல., அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களால் முழு அளவிலான போராக மாறியுள்ளது.

இதையும் படிங்க: அத்துமீறும் ஈரான்..!! எதிர்க்க நாங்க தயார்..!! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை..!!

இந்தப் போரின் விளைவாக உலக அளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் நிதன்யாஹு அலுவலகத்தை ஈரானின் ஏவுகணை தாக்கியதாக முதற்கட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சி படை நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பிரதமரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் ஏதும் தாக்குதல் நடத்தை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதல்..!! சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी