திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரே நாளில் நான்கு குழந்தைகளை நாய்கள் கடித்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த முகமது அபுதாகிர் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி சுல்தான்பீவி இவருக்கு அஜ்மல்பாஷா என்கிற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தையை வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெறி நாய் ஒன்று குழந்தையை கடித்துள்ளது. அதனை தடுக்க முயன்ற பாட்டி மல்லிகாபீவியையும் கடித்துள்ளது.
உடனடியாக இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தை அஜ்மல் பாஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் நெருநாய்கள்... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி...!
மேலும் இன்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த நான்கு குழந்தைகள் நாய் கடித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திருவாரூர் அழகிரி காலனி ஹரிஹரன் 12 வயது, வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த லக்க்ஷனா 3 வயது , நன்னிலம் அருகே படுகை தெருவை சேர்ந்த மணிஷா 3 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு குழந்தைகளை நாய்கள் கடித்தது வேதனை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ED வளையத்திற்குள் புதிதாக 3 திமுக அமைச்சர்கள்... திமுகவை சுத்துப்போட்டு கட்டிப்போட பார்க்கும் பாஜக...!