வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

“SAFETY FIRST”.. தூய்மை பணியாளர்களுக்கு பூட்ஸ் குடுங்க! தமிழக அரசுக்கு தமிழிசை வலியுறுத்தல்..!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்விச்சலவை தமிழக அரசை இருக்கும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிலையில் உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாநகராட்சி கிளவுஸ் மற்றும் முட்டி வரை இருக்கும் பூட்ஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வரலட்சுமி குழந்தைகளை காப்பாற்ற அரசு முழு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी