10,11 ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே ரிசல்ட்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வரும் 16ஆம் தேதியே வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் 16ஆம் தேதி காலை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும், பிற்பகல் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியானதை போலவே 10, 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்பே வெளியாகிறது. தேர்வு விடைத் தாள் திருத்தும் பணிகள் முடிந்து விட்டதால் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!
இதையும் படிங்க: மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!