×
 

உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக உதகை சென்றுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ளவர்களிடம் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அண்மையில் திறக்கப்பட்ட நீலகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

நீலகிரி கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவமனையில் உள்ள வசதிகள் தொடர்பாக நோயாளிகளிடம் கேட்டறிந்தார். வசதிகள், குறைபாடுகள், குடிநீர் வசதி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்.. இவருக்கு இதே வேலை தான்! முக்கிய புள்ளியை சாடிய முதல்வர்..!

இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share