பரிகார பூஜை லீலைகள்... சிறுமிகளை சீரழித்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை... சிவகங்கை நீதிமன்றம் அதிரடி....!
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை -இரண்டு லட்சம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
சிவகங்கை மாவட்டம் மானகிரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52) ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகள் செய்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவ. மாதம் ஒரு தாய் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோதிடம் கேட்க வந்தார் அவர் தன்னுடைய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்யும்படியும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தாய் தனது இரண்டு குழந்தைகளையும் மானகிரியில் உள்ள ஜோதிடர் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும்படி ஜோதிடர் கூறியுள்ளார். இதைத் நம்பிய அந்த தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார் அப்பொழுது தாயாரை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இந்த தகவலை யாருக்கும் சொல்லக்கூடாது என்றும், மீறி கூறினால் அவர்களின் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு பயந்து போனா இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டனர். இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களை மருத்துவமனையில் அழைத்துச் சென்ற பரிசோதித்த போது அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை...! நந்தனம் கல்லூரி கேட் கீப்பர் டிஸ்மிஸ்..!
இது தொடர்பாக விசாரித்த பொழுது இந்த சம்பவம் தெரிந்தது. இது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 இரண்டு லட்சம் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நக்சல் ஒழிப்புக்கு கைமேல் பலன்!! முதல்முறை கிடைத்தது மின்சாரம்!! மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில மக்கள்!