×
 

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து - டெம்போ டிராவலர்... விபத்தில் பறிபோன 4 உயிர்கள்; தஞ்சையில் பயங்கரம்!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஒருபுறம் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் மறுபுறம் வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறாக சாலை விபத்துகளில் உயிர்சேதம் ஆவது தொடர்ந்து வருகிறது. இது வேதனைக்குரியதாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை மீறி புளிய மரத்தில் மோதிய கார்..! குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்..!

கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவலர் வேன் ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கிச் சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்குவாரியில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி... கதறும் குடும்பத்தினர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share