×
 

கட்டுப்பாட்டை மீறி புளிய மரத்தில் மோதிய கார்..! குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்..!

பாடலூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்றுள்ளது. காரானது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடலூர் அருகே புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் புளிய மரத்தில் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த பாலபிரபு, அவரது மாமனார் மற்றும் இரண்டரை வயது குழந்தை உள்ளிட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அக்கம் பக்கத்தினர் உதவியோடு, விபத்தில் படுகாயம் அடைந்த சித்த மருத்துவர் கௌரி என்பவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படிங்க: கல்குவாரியில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி... கதறும் குடும்பத்தினர்!

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை புரியுத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share