500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் இந்த மரங்கள் வளர்ந்து வருகின்றன.
சென்னை அருகே பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே காட்டுப்பாக்கத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் இந்த மரங்கள் வளர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: காவிரி இணைப்பு திட்டம் நடக்கும் போது ரஜினிகாந்த் நிதி வழங்குவார்! லதா ரஜினிகாந்த் பேட்டி!
இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக இந்தப் பகுதியில் இருந்த சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது வனத்துறை அதிகாரிகளும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ‘ஜட்ஜ் போர்ஸ்’ என அழைக்கப்படும் சந்தன மரங்களும் வெட்டிக் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை சந்தன மரத்தின் ஒரு கன் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை விலைபோகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தனம் மற்றும் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் வீரப்பன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!