இன்று ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கரைபுரண்ட பக்தர்கள்... அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்...!
ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.
இராமேஸ்வரம்,துவாரகா,பூரி, பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய திருத்தலங்களில் இராமேஸ்வரம் மட்டும் தெற்கே அமைந்துள்ள சிவஸ்தலம் ஆகும், மற்றவை வடக்கே அமைந்துள்ள வைணவ திருத்தலங்கள் ஆகும், 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும் தெற்கே இராமேஸ்வரமும் அமைந்துள்ளன, தீர்த்த,மூர்த்தி, ஸ்தலம் ஆகிய முப்பெரிமையுடைய இப்புனித திருத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலம் ஆகும், அவதார புருஷரான இராமர் ஈஸ்வரனை வழிபட்டதாலேயே இத்திருத்தலத்திற்கு இராமேஸ்வரம் என பெயர் வரக் காரணம் ஆயிற்று, காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி, இராமேஸ்வரத்தை தரிசித்தாலே முக்தி, காசி யாத்திரை அருள்மிகு இராமநாதசாமியை இராமேஸ்வரத்தில் வழிபட்ட பின்பு தான் நிறைவு பெறுகிகிறது.
இப்படி பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அதேபோல திருவிழா மட்டும் விடுமுறை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது, வருடத்தில் 12 அமாவாசை தினங்கள் வந்தாலும், அனைத்து அமாவாசை தினங்களிலும் திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் , ஆடி, தை,புரட்டாசி, அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்,கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது,
இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி , தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்த பின்பு இராமநாதசாமி திருக்கோவிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களின் நீராடிய பின்பு இராமநாதசாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை நீண்ட நேரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வருகை தந்துள்ள பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகமும், அதேபோல பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே குற்ற சம்பவங்களில் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் கடலோர காவல் குழும போலீசார் படகுகள் மூலம் கடலில் நீராடும் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் திடீர் மாற்றம்... 300 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்... தரை தட்டி நிற்கும் படகுகள்...!