×
 
☰

"BLACK TICKET"..! பழக்க தோஷத்துல வித்துடாதீங்க..! ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. EPS விளாசல் .!!

ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையை உயர்த்தியதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்களுக்குச் சுமை ஏற்றும் வகையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.தமிழக மக்களுக்கு வெற்றி தீபாவளி பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்புப் பலகாரங்களின் விலையைக் கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளதாகப் பழனிசாமி தெரிவித்தார்.

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய் மற்றும் இனிப்புகளை வாங்குவார்கள் என்பதை அறிந்தும், சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று அரசு நினைத்துச் செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை என்று அவர் கேள்வி எழுப்பினார்.வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்குச் சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசோ சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போலச் செயல்படுவதாக விமர்சித்தார்.

நடிகராக இருக்கும்பொழுது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி பிளாக் டிக்கெட்டாக விற்பது போல, இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்திவிட்டீர்களா என்று அவர் கேட்டார். பழக்கத் தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள் என எச்சரித்தார்.

இதையும் படிங்க: 23-ஆம் புலிகேசியை போல் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உற்சாகம்: முதல்வர் விஜயை விளாசிய இபிஎஸ்!

அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம் என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை நியமித்துள்ளீர்கள் என்று முதலமைச்சர் விஜயிடம் கேள்வி எழுப்பினார். மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: பெருமைமிகு வரலாறு..! அதிமுக 55 ஆம் ஆண்டு விழா..!! EPS உற்சாகம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share