தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை..! நடிகர் பிரகாஷ்ராஜ் சுளிர் பேச்சு..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு போதுமான அரசியல் புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜயும் பிரகாஷ்ராஜும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த படங்களில் குறிப்பாக கில்லி படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படத்திலும் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். எப்போதும் பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறக்கூடியவராக பிரகாஷ் ராஜ் இருந்து வரும் நிலையில் விஜயின் அரசியல் குறித்தும் விமர்சித்துள்ளார்.
விஜய்க்கு அவர் நெருக்கமானவராக இருந்தாலும் கூட விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை என்று பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை திரும்பினார் விஜய்! அத்துமீறிய பவுன்சர்கள்.. பதற்றத்தில் ஏர்போர்ட்..!
சிலர் விஜயை பவன் கல்யாணுடன் ஒப்பிடுவதாகவும் தெரிவித்த அவர், பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் நாட்டை கொடுத்து விட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி எனக்கூறி வாய்ப்பு கிடைப்பதாக கூறிய பிரகாஷ்ராஜ், விஜய்க்கு போதுமான அரசியல் பக்குவம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026-ல் டீ விக்க தான் போறாங்க.. திமுக கூட்டத்தில் தவெகவை கிண்டலடித்த லியோனி!