×
 

விஜய் பற்றி பேசியதால் பழிவாங்குறாங்க! தவெக நிர்வாகி மீது நடிகை ஜூலி போலீசில் புகார்!

ஒரு பெண்ணின் கேரக்டரையும், தொழிலையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பொய்யான செய்திகளைப் பரப்புவது ஏற்க முடியாதது என ஜூலி ஆவேசமாக தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் குறித்து தான் தெரிவித்த கருத்திற்காக, தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகவும், சிறுநீரக விற்பனை மோசடியில் தனக்குத் தொடர்பு இருப்பதாகப் பொய்யான செய்திகள் வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் ஜல்லிக்கட்டு தொடர்பாக தெரிவித்த 'குட்டிக்கதை' குறித்து ஜூலி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்குப் பிறகு தவெக ஆதரவாளர்கள் மற்றும் சில யூடியூபர்கள் தன்னைத் தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் விமர்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் செவிலியராகப் பணியாற்றிய காலத்தில் சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக கார்த்திக் குமார் மற்றும் நெல்சன் உள்ளிட்டோர் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் பொய் எனவும், தான் எந்தவிதமான உடல் உறுப்பு கடத்தல் அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் ஜூலி மறுத்துள்ளார்.

இதையும் படிங்க: நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியும், 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் உரிமையாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட், கார்த்திக் குமார், சரத், ஷர்மிளா, பூவரசன், நடிகர் அருண் ராஜன் மற்றும் ராஜு ஆகிய 8 நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார். இவர்கள் தனது திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து அவதூறு பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவதூறாகப் பதிவிடப்பட்ட வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, அந்தப் பக்கங்களை முடக்க வேண்டும் எனவும் ஜூலி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜூலி, சமூக வலைதளங்களில் ஒரு கருத்தைத் தெரிவித்தால் அதற்கு எதிர் கருத்து சொல்லலாம். ஆனால், ஒரு பெண்ணின் கேரக்டரையும், தொழிலையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பொய்யான செய்திகளைப் பரப்புவது ஏற்க முடியாதது என ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share