அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜயுடன் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார்.
இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது.இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பெண்ணொருவரின் பெயரை இழுத்து அரசியல் எதிரியை தாக்குவது தரம் தாழ்ந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், விஜயுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசியல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். எந்த அரசியல் கட்சியுடன் இணைந்து இருக்காத பட்சத்தில் அதனை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!
அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் த்ரிஷா தெரிவித்துள்ளார். தனக்கு அரசியல் அடையாளம் தேவையில்லை என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் கருத்துக்களை நாகரீகமாக முன் வைக்க வேண்டும் என்றும் திரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!