அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
அடங்கா ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்னமும் முன்மொழியப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதே, ஒரு மடைமாற்று அரசியல் தான் என்று தெரிவித்தார். இதில், அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து விட்டார் என்பதற்காக, எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்களை “ஒற்றைப் பிரதிநிதித்துவம்” என்று கேலி பேசுவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
அவையின் மூத்த உறுப்பினர் என்ற மரியாதை துளியும் இன்றி, போஜராஜன் மீது வைத்த தரம் தாழ்ந்த விமர்சனம் உங்கள், அரசியல் வளர்ப்பிற்கான உதாரணம் என்று தெரிவித்தார். குறுகிய காலத்திற்குள் பல கட்சி தாவியதால் வந்த பழக்கம் போல. “வாய் புளித்ததோ, மா புளித்ததோ” என்று எதையாவது பேசாமல், முதலில் அவை ஒழுக்கத்தையும், அரசியல் நடப்புகளையும் முறையாகக் கற்றுக் கொண்டு, பின்பு சட்டமன்றத்திற்கு வாருங்கள் என்று கூறினார்.
காரணம், தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் தொகுதி மறுவரையறையினால், தமிழகத்தின் MP-க்கள் குறைந்து விடுவார்கள் என்று நீங்கள் கூறுவது, உங்கள் அறியாமையின் வெளிப்பாடு தான் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!
4 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் தொகுதிகளையும், ஒரு மாநிலத்தைவிட அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தொகுதிகளையும் தற்போது நமது மக்களவை உறுப்பினர்கள் சமாளித்து வருகின்றனர். தொகுதி மறுவரையறை மூலம் இத்தகைய குறைகளை களைந்து, தமிழக மக்களின் பிரச்சனைகள் எளிதாக சீர் செய்யப்படும் என கூறியுள்ளார். ஆனால் அதே வேளையில், தங்களது Freeze delimitation கொள்கையானது தமிழக மக்களின் குரலை ஒட்டுமொத்தமாக முடக்கிவிடுவதற்கு தான் வழிவகுக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறினார்.
இதையும் படிங்க: சொந்தக் கட்சிக்காரரே ஆனாலும் விதி ஒன்றுதான்.. ஆதவ் பேச்சை நீக்கி அதிரடி காட்டிய ஜே.சி.டி.பிரபாகர்!