"விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!
முதல்வர் விஜயின் முதல் போராட்டமே விவசாயிகளுக்காக பரந்தூரில் தான் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டபோது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்தார். அப்போது, 200 தொகுதிகளை வெல்வோம் என திமுக நம்பியது என்றும் முதல்வர் விஜய்யின் முதல் போராட்டம் விவசாயிகளுக்காக பரந்தூரில் தான் நடந்தது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சொந்தக் கட்சிக்காரரே ஆனாலும் விதி ஒன்றுதான்.. ஆதவ் பேச்சை நீக்கி அதிரடி காட்டிய ஜே.சி.டி.பிரபாகர்!
விவசாய கடன் தள்ளுபடி திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் எண்ணம் திமுகவுக்கு இல்லை கூறினார். 5 ஆண்டு ஆட்சியையும், 3 மாத ஆட்சியையும் ஒப்பிடுவது சரியா? என்று கேட்டுள்ளார். நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 100% இருந்த கரும்பு சாகுபடி 30% குறைந்துள்ளது. கரும்பு உற்பத்தி திமுக ஆட்சியில் 70% சரிந்தது. CM விஜய்யின் ஆட்சி விவசாயிகளுக்கு பொற்காலமாக இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!