அடுத்த விக்கெட்..! அதிமுகவின் R.K. நகர் ராஜேஷ் தவெகவில் ஐக்கியம்..! செங்கோட்டையனிடம் வாழ்த்து.!
அதிமுகவில் இருந்து ஆர் கே நகர் ராஜேஷ் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட்டதிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 73 இடங்களையும் அதிமுக 53 இடங்களையும் பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு குறைவாக இருந்த தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைத்தது.
மே 10, 2026 அன்று விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிகழ்வு தமிழக அரசியலின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜேஷ், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய இவர், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இணைவு நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!
ஆர்.எஸ்.ராஜேஷ் தன்னைத் தவெகவில் இணைத்துக் கொண்டார். அப்போது மயிலாப்பூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும் அவருடன் இணைந்தனர். தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் ராஜேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பல முக்கியத் தலைவர்களும் நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வரும் பின்னணியில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. ஆர்.எஸ்.ராஜேஷ் தவெகவில் இணைந்தது சென்னை அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!