×
 

சட்டப்பேரவையில் கடும் அமளி... சபாநாயகரே நடவடிக்கை எடு... அதிமுகவினர் வெளிநடப்பு...!

சட்டப்பேரவையில் கடும் அமலில் ஈடுபட்ட அதிமுகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்ற வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்டதால் அங்கு செல்லவில்லை என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.

கரூர் துயரத்தில் உயிரிழந்த அனைவரும் அப்பாவிகள், மிதிபட்டு இறந்தவர்கள் என்றும் அவர்களுக்காக சென்றதில் என்ன தவறு என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டார். கள்ளச்சாராயம், கிட்னி திருட்டு என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் பேசப்பட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற சட்டப்பேரவை விவாதத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவரது பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். எதையெதை நீக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அவை குறிப்பில் இருந்து நீக்குகிறோம் என்றும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து சொல்லுங்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்ன ரத்த அழுத்தமா? கருப்பு பட்டை அணிந்த அதிமுகவினரை கிண்டல் செய்த சபாநாயகர்...!

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் அவையில் இருந்து காவல்துறையினரை வைத்து வெளியேற்று நேரிடும் என்ற சபாநாயகர் எச்சரித்தார். இதை எடுத்து அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவை தலைவரே நடவடிக்கை எடு என்று முடக்கமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: கைகளில் கருப்பு பட்டை... திமுக அரசுக்கு எதிர்ப்பு! சட்டப்பேரவைக்குள் ENTRY கொடுத்த அதிமுக உறுப்பினர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share