×
 

#BREAKING: முடியாத சண்டை! பாமக தலைவர் அன்புமணி தான்… வழக்கறிஞர் பாலு திட்டவட்டம்..!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று வழக்கறிஞர் பாலு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதல் முறை விளக்கம் அளிக்காத நிலையில் இரண்டாவது முறையும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அன்புமணி விளக்கம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். கட்சி விதிகள் படியும் ஜனநாயக முறைப்படியும் விளக்கம் தர அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாமகவில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் ராமதாஸின் அறிவிப்பு எந்த வகையிலும் அன்புமணியை பாதிக்காது எனவும் தெரிவித்தார். பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

 கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். அன்புமணி தரப்பு கூட்டிய பாமக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணியின் பதவி காலத்தை நீடித்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கூறியுள்ளார் அன்புமணியின் பதவி காலத்தை நீட்டித்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தல்வது எனக் கூறினார் அன்புமணி பதவி காலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  

இதையும் படிங்க: #BREAKING: அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும்... பாமக என் உழைப்பு! ராமதாஸ் திட்டவட்டம்

பாமகவின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் பாலு வலியுறுத்தினார். ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது என்றும் கூறினார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்கிறார் என்றும் தெரிவித்தார். உணவு பார்த்து இருந்தால் கட்சியில் இப்படி ஒரு பிரச்சனையை ஏற்பட்டு இருக்காது என்றும் பொழுது பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அன்புமணி கூட தொடர்பு வச்சுக்கிட்டா அவ்ளோதான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share