×
 

கந்து வட்டி கொடுமை... இளம் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது...!

பொள்ளாச்சியில் நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டிக்கு கொடுத்து இளம் பெண்ணிடம் பணம் கேட்டு டார்ச்சர் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் இன்றளவும் கந்து வட்டி கொடுமை நீடித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி முத்து கவுண்டர் லே-அவுட் வீதியில் வசித்து வருபவர்  செந்தில்குமார். இவர் அதிமுக இளைஞரணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் கந்து வட்டி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்  நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 6 மாத
மாதத்திற்கு முன்பு ரூபாய் 20 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார். இதற்காக நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டி வீதம் வட்டி வசூல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் கணவருக்கு உடல்நலம் சரியில்லாததால் பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை, தொடர்ந்து செந்தில்குமார் தொலைபேசியில் அழைத்து 
கந்துவட்டி கேட்டும் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்  பொள்ளாச்சி கிழக்கு  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையும் படிங்க: இன்னும் 4 மாசம் குடுப்பீங்க... உங்க நாடகம் எல்லாருக்கும் தெரியும்..! விளாசிய அதிமுக..!

இதன் அடிப்படையில் செந்தில்குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்து வட்டி தடை சட்டம்: 

அதிக வட்டி வசூலிப்பதை தடுக்க, தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடை சட்டம், 2003ல் கொண்டு வரப்பட்டது. கடனை வசூலிக்க அடியாட்களை ஏவி விட்டு மிரட்டுதல், தாக்குதல் நடத்தவதால், கடன் பெற்றவர்கள் அதற்கு பயந்து, தற்கொலை செய்வது அதிகரித்தது. இதை தடுக்க அதீத வட்டி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி தினசரி வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான பெயர்களில், வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம்.

அதீத வட்டி வசூலிப்போருக்கு, மூன்றாண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமுள்ளது.அதீத வட்டி கொடுமையால், யாராவது தற்கொலை செய்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, தற்கொலைக்கு துாண்டிய குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.

இதையும் படிங்க: திரையரங்குகளை திருவிழா கூடங்களாக மாற்றும் STYLE MAGIC... ரஜினிகாந்த்-க்கு இபிஎஸ் வாழ்த்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share