×
 

ரத்தமே விஷம்! சிதைந்து போன தசைநார்கள்.. அஜித்துக்கு நடந்த துயரத்தை விளக்கிய வழக்கறிஞர்..!

அஜித் குமார் மரணம் போலீசார் கூறுவது போல வலிப்பு நோயால் ஏற்படவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி உறுதிப்படக் கூறி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தில் இருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அஜித் குமாரின் மரண வழக்கு கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்ட பிறகு, ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொடூரமான, மிருகத்தனமான முறையில் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாகவும், சாதாரண கொலையே அல்ல என்றும் தெரிவித்தனர்.

சிபிசிஐடி சிறப்பு குழு அதிகாரிகள் நேர்மையான முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என்றும், மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். கொலை செய்பவர் கூட இந்த அளவுக்கு அடிக்க மாட்டார்., மிகவும் மோசமான தாக்குதல் அஜித்குமார் மீது நடத்தப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது வெறும் கண் துடைப்பு என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!

இந்த நிலையில், அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பேட்டியளித்தார். அப்போது, திருப்புவனத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார், போலீசார் கூறுவது போல் வலிப்பு நோயால் இறக்கவில்லை என வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.  அஜித் குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 50 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக பிரேத பரிசோதனை நடந்ததாகவும், மிகவும் நேர்மையான முறையில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை பாராட்டுவதாகவும் கூறினார். 

சிறப்புப்படை போலீசாரின் தாக்குதலில் தசைநார்கள் முற்றாக பழுதடைந்து, அதன்மூலம் ரத்தமே விஷமாகி மரணம் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார். வழக்கை சிபிஐக்கு ஒப்படைப்பதை விட தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பலர் இருப்பதாகவும் அவர்களை வைத்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கஸ்டடி மரணம்.. கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share