×
 

#BREAKING: அஜித்குமார் கொலை வழக்கு... சிபிஐ-க்கு மாற்றி மதுரை கிளை அதிரடி உத்தரவு!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்திருந்தது.

கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், இது சாதாரண கொலை அல்ல... அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்ற குற்றம் சாட்டினர். இதை அடுத்து சிவகங்கை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நீதி விசாரணை நடைபெறும் என்றும் சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கு சிபிஐ க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அஜித் மரணத்தில் விதிமீறல்கள் நடந்து இருப்பதும் மாவட்ட நீதிபதியின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், லாக்கப் மரணத்தில் முகாந்திரம் உள்ளதாகவும் கூறி வழக்கை சிபிஐக்கு வைக்க மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... திடுக்கிடும் தகவல்கள்!

விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் விரைவாக விசாரிக்க வேண்டுமென்றும், ஒரு வாரத்தில் சிபிஐ விசாரணை அதிகாரி வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அஜித் சகோதரருக்கு ஆவின் பணி வழங்கி விட்டீர்கள்., அவரது தாயாருக்கு என்ன நிவாரணம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயில்ல போட்டாலும் பிரச்சனை இல்ல.. தடையை மீறி போராடுவேன்.. சீமான் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share