×
 

அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

அஜித் - ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த 'அமர்க்களம்' படம் ஏப்ரல் 24ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காதல் ஜோடிகளான அஜித் குமார் - ஷாலினி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஆல்-டைம் பிளாக்பஸ்டர் திரைப்படமான அமர்க்களம்  மீண்டும் திரைக்கு வரவுள்ளது. வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

அஜித் மற்றும் ஷாலினி இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது 26-வது திருமண நாளைக் கொண்டாடும் வகையில், அவர்களின் காதலுக்கு அடித்தளமிட்ட இந்தப் படம் மீண்டும் திரையிடப்படுகிறது. சரண் இயக்கத்தில் உருவான அஜித்தின் 25-வது படமான இது, அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகும்.

தமிழகம் முழுவதுமான திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ள ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக்.வி, இதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தற்காலத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பு மற்றும் காட்சிகளுடன் இந்தப் படம் வெளியாகிறது.

இதையும் படிங்க: அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

அஜித்தின் துடிப்பான நடிப்பும், ஷாலினியின் எதார்த்தமான நடிப்பும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பெரிய திரையில் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ரகுவரன், ராதிகா, நாசர் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பும் இந்தப் படத்திற்குப் பெரும் பலம்.

ஏற்கனவே விஜய்யின் 'கில்லி' திரைப்படம் ரீ-ரிலீஸில் பெரும் வசூல் சாதனை படைத்த நிலையில், அஜித்தின் 'அமர்க்களம்' திரைப்படமும் வசூலில் புதிய ரெக்கார்டுகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தல ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் இதற்கான கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

அஜித் - ஷாலினி ஜோடியின் அந்த மேஜிக்கல் கெமிஸ்ட்ரியை மீண்டும் திரையில் பார்க்க ஏப்ரல் 24 வரை காத்திருப்போம்!

இதையும் படிங்க: "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share