"விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!
நாளை திட்டமிட்டபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, மனுக்களை திரும்பப்பெறும் நேரம் உள்ளிட்டவை நிறைவடைந்தன. இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நாளை திட்டமிட்டபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த கட்டத்தில், விஜய்யின் இந்த வருகை தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!
அந்தத் தொகுதிகள் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை ஆகும். இந்த ஆறு தொகுதிகளுக்கும் ஒரே நாளில் பிரசாரம் செய்ய விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மொத்தம் ஆறு மணி நேரம் மட்டுமே இந்த பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!